Friday, 2 January 2015

என் கிராமத்துத்தாயே!

என் கிராமத்து தாயே .!சரஸ்வதியே
58வது அகவையில்
கால் பதிக்கும் உன்னை
போற்றி புகழஎன்னிடத்தில்
வார்த்தை இல்லை..!

ஏட்டைப்புரட்டி எழுதுகின்றேன் தாயே..!
என்னை ஏற்றி வைத்த ஏணி நீ
ஏந்தி நிற்பேன் உன்னினைவை
தினம் என் நாளில் ........!

எல்லோர்க்கும் மடி கொடுத்தாய்
தலை சாய்ந்து துயில் கொள்ள.
செடிமலர் தந்து கை பதிக்க வைத்தாய் அன்று.!
இன்று உன் கொடி வந்த
சுவிஸ் கிளையில் தலை நிமிர்நது நின்றேன்
முற்றத்து மலர் என்னும் கவிமலர் தூவி...!

அடி வைத்த இடமெல்லாம்
முடிவில்லா பயணமாகின்றது
என் முயற்சிக்கு நீதான் துணை.
கொடிவிட்டு மலர்களாய்
பரணியெங்கு நாம் பரந்தாலும்
உன் குடையின் கீழ் ஒன்றாக நடைபயின்று.
தரணிபோற்றும் படி
தினம் துதிப்போம் உன் நாமமதை.

எழுதவைத்தாய் பேசவைத்தாய்
தலைமைதுவம் எப்படியென்று
தவறாமல் கற்ப்பித்தும் விட்டாய்.
ஒற்றுமையே எம் பலமென்று நீ
தினம் எடுத்துரைத்தாய்.
தாழ் பணிந்து வணங்குகின்றேன் தாயே
உன் தலைசிறந்த வழிகாட்டலுக்கு..

முடியவில்லையம்மா என்னால்
உன் அகமகிழ்ந்த அகவைதனில்
நானும் கலந்து முகம் மலர்நது கொள்ள.
முயற்சிக்கின்றேன் தினம்
மீண்டும் ஒரு அகவைதனில்
நானும் அழாவிக்கொள்ள.

போற்றி புகழ்ந்தாலும் போதாதம்மா
நீ எமக்கு போதித்த போதனைக்கு ஈடு.
நாடு கடந்தாலும் தினம்
நாவில் உன் உச்சரிப்புத்தான்
வாழ்த்துகின்றேன் தாயே ....
மீண்டும் உன்னை வணங்கி......



No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews