Friday, 2 January 2015

என்னவள்

சிலவேளை சிலநொடி
அவள் நடையோடு...!
தினம் விளையாடும் என் இதயம்
அதை களவாடும் பொழுதாய்
கனவாக்கிக்கொள்ளும்.

எழிதாய் கிடைத்திடா...!
எழில் வண்ணக்கிளியாய்
ஒளியாய் என் இதயத்தில
மிளிர்ந்தாள்...!

மலராய் என் மனதில் அவள்
வரமாய் பதிந்தாள். தினம்
சுகமாய் என்னுள் சுரந்தாள்.


அவளின் சாயல்


சாலையோரம் உன் 
சலங்கையின் கீதம். என் 
காதினூடே கவலையின் நீக்கம்
மாலை மேகக் கூட்டம் உன்
மடியினில் நான் தலைசாயும்
கோலம்.....!

அந்திவானம் உன் அழகின் சாயல்
பிந்திப்போனால் பிரினவின் சோகம
மங்கிப்போன இருளில் உன்
மகிமைக் கோலம் என் மனதை
அள்ளும் அருமைக்காலம்.

நிலவின் சாயல் உன் நெற்றி
நிகழ்காலம் அதுவே வெற்றி.
முதுமைக்காலம் முன்னே
உன் மகிமை வேண்டும் பெண்ணே....இனி
இரவும் வேண்டாம் பகலும் வேண்டாம்
உன் விழிகள் காணும் அவைகள் சொல்ல

எதுகைமோனை கொண்டேன்
எதிலும் உன்னைக்கண்டேன்
அதிலும் கூடக்கண்டேன்
உன் அழகின் பெருமைதன்னை...!


என் தாரகையே

மேகத்தின் சாயலில் 
மறைந்திருக்கும் உன்
மோகத்தால் என்
தேகம் சிலிர்க்குதடி...!

தாகம் தீர்க்கும் தடாகமோ _நீ
எனை தானம் கொண்ட தாரகையே.
ஞானம் பிறக்குதடி..என்னவளே உன்
நாணம் காண்கையில்.

வானம் சிவக்கும் மாலை. நீ
என் வாசல் வந்த பாவை.
சோலை வனம் கொண்ட உன் 
தோகை. அதில் சரமாலை அணியும்
சேவகனோ நான்.
வாகை சூடும் நேரமாச்சு இனி என் 
வாழ்வினிலும் சாரமாச்சு.
நாளி போகுதடி என் இதயமும்
நழுவுதடி..


கோடைகாலம்


கோடைகாலம் பிறந்தாச்சு
ஆடைகளும் குறைந்தாச்சு
மாடல் என்ற பேரில் எம்
மண்வாசமும் போயாச்சு

ஊரைவிட்டு வந்தோமடா
கோடைகாலம் வந்தால் எம்மை
ஊருக்கே இழுக்குதடா.... இங்கு
வாடை இன்றி போனாலும் தினம்
வாசனைத் திரவியம் கேட்குதடா

ஏரியில்லா ஊரானாலும் நல்
ஏசிபோல காற்றெடுக்க நல்
மரம்தான் அங்குண்டு. இங்கு
காற்றெடுக்க கடற்கரை போனால்
கரைநெடுகே.......!

உறுதியெடுத்துக் கொள்வோம். நீர்
ஊற்றெடுக்கும் எம்மூரில் தினம்
கழித்திடுவோம் கோடையென்னும்
விடுமுறையை......!



மே நாள்



Views 393

உழைத்திடும் மக்கள் 
ஓய்ந்திடும் நாளே?.. அன்றி 
ஓய்ந்திடா உழைத்திட நாம் 
உறுதி கொள்ளும் நாளே


என் கிராமத்துத்தாயே!

என் கிராமத்து தாயே .!சரஸ்வதியே
58வது அகவையில்
கால் பதிக்கும் உன்னை
போற்றி புகழஎன்னிடத்தில்
வார்த்தை இல்லை..!

ஏட்டைப்புரட்டி எழுதுகின்றேன் தாயே..!
என்னை ஏற்றி வைத்த ஏணி நீ
ஏந்தி நிற்பேன் உன்னினைவை
தினம் என் நாளில் ........!

எல்லோர்க்கும் மடி கொடுத்தாய்
தலை சாய்ந்து துயில் கொள்ள.
செடிமலர் தந்து கை பதிக்க வைத்தாய் அன்று.!
இன்று உன் கொடி வந்த
சுவிஸ் கிளையில் தலை நிமிர்நது நின்றேன்
முற்றத்து மலர் என்னும் கவிமலர் தூவி...!

அடி வைத்த இடமெல்லாம்
முடிவில்லா பயணமாகின்றது
என் முயற்சிக்கு நீதான் துணை.
கொடிவிட்டு மலர்களாய்
பரணியெங்கு நாம் பரந்தாலும்
உன் குடையின் கீழ் ஒன்றாக நடைபயின்று.
தரணிபோற்றும் படி
தினம் துதிப்போம் உன் நாமமதை.

எழுதவைத்தாய் பேசவைத்தாய்
தலைமைதுவம் எப்படியென்று
தவறாமல் கற்ப்பித்தும் விட்டாய்.
ஒற்றுமையே எம் பலமென்று நீ
தினம் எடுத்துரைத்தாய்.
தாழ் பணிந்து வணங்குகின்றேன் தாயே
உன் தலைசிறந்த வழிகாட்டலுக்கு..

முடியவில்லையம்மா என்னால்
உன் அகமகிழ்ந்த அகவைதனில்
நானும் கலந்து முகம் மலர்நது கொள்ள.
முயற்சிக்கின்றேன் தினம்
மீண்டும் ஒரு அகவைதனில்
நானும் அழாவிக்கொள்ள.

போற்றி புகழ்ந்தாலும் போதாதம்மா
நீ எமக்கு போதித்த போதனைக்கு ஈடு.
நாடு கடந்தாலும் தினம்
நாவில் உன் உச்சரிப்புத்தான்
வாழ்த்துகின்றேன் தாயே ....
மீண்டும் உன்னை வணங்கி......



நினைவாக


உன் காதோரம் வருடும் கூந்தலோடு
கவிபாட எண்ணுகின்றேன்...பெண்ணே!
உன் நினைவோடு வாழும்
மன்னவனும் நானே.....!
குயில் பாடும் குரலேதும் கேளேன் நீ
குரைத்தாலும் அது இசையாகும் தேனாய்....

கவியாலே உனைப்பாட இயலா தினம்
கவியாக நீ வாழ்கின்றாய் என் உயிராய்.
மலராக உன்னைக்காண வேண்டும் தினம்
உன் மனதோடு நான் உரையாட வேண்டும்.


அம்மா

அம்மா....!
கவிக்குள் அடங்கா
காவியச்சொல் இது
கவியர்கள் கூட
அடக்கிட முடியா 
அசையாச்சொல் இது.
ஆனால்.....
அனைவரையும் அன்புடன்
அரவணைக்கும் ஓர்
அழகான சொல்...
அம்மா...அம்மா..



விதிப்படி

கண் மூட முடியவில்லை 
கண்மணியே... தினம் 
கண்ணில் உன் உருவம். 
காதோரம் கேட்கின்ற இசையில் 
கனிவான உன் குரல் கீதம்.... 
பணிவான உன் நடைதூரம் 
பகல் நிலா காயும் என் தேகம்.....

விடை காண முடியா ஒரு 
வினாப்போல தினம் என்னுள் 
விளையாடிச் செல்கின்றாய். 
உரையாடத் துடிக்கும் என் உதட்டை 
விரையாக்கிச் செல்லாதே.. 
இது விளையாடும் நேரமில்லை 
என் விழி நீர் சொரியுதடி 
விடுகதையே போதுமடி 
விதிப்படி நடக்கட்டும்.....

வண்ணக்கிளியே


என் எண்ணத்திரையில்
உன் வண்ண முகம்....!
உன் கன்னத்தை கிள்ள
எண்ணத்தோன்றுதடி. என்
வண்ணக்கிளியே.....!

வட்ட நிலாவும்
தோற்றுப்போகும். உன்னை
தொட்டுப்பார்த்த கணத்தில்.
கன்னத்தில் கைவைத்தாற்ப்போல்
எண்ணத்தில் கொள்ளை கொள்ளுது
வண்ணத்துப்பூச்சிகளும்.....

வானவில்லே வளைந்து கொண்டதடி
அசைந்து கொண்ட உன்
அழகினைக்காண...என்னவளே
விண்ணகமும் விரைந்ததடி

மண்ணகத்தை நனைத்துக்கொள்ள
உந்தனது மேனிதனில்
புழுதியது படுவதனை தடுத்திட....

 


கால மாற்றம்


தாகம் கொண்டு 
தேசம் கடந்தோம் இன்று
தேகம் நொந்து 
தாகம் கொண்டோம் இது 
காலத்தின் விதியோ....

மாலைக்கதிரவன்
மண்ணில் தொடும்வரை
வாலைக்கிழப்பும் எருதோடு
பழகிய நாம். இன்று...
மூக்கை சுழிக்கும் 
வெள்ளையனுடன்....

உழுதுண்டு வாழ்ந்த
வரலாற்றுப் பரம்பரை நாம் இன்று
பழுதுண்டு பாழாகிப்போனதேன்.
மனதோடு பேசாது
தெழிவாகப் பேசி மகிழ்ந்துண்ட நாம்
இன்று கைபேசியூடே
காலம் கழிவது வேதனை....

ஆளுக்கொரு பேசியூடு
அவரவர் மூலையிலே....
பசியோ நித்திரையோ அட
அது என்னவென தெரியாத பலர்
இங்கு இப்படித்தான் வாழ்க்கை....

வெளிநாட்டில் நம் தாய்மொழி தான்
பேசிடார் என்றால்.... இனி
வரும் காலத்தில் பேசிடத் தான்
மறந்திடுவார்....


தவிப்பு


கண்ணிமையில் நீ தூசாக...
கண்ணிமைக்க முடியாமல்
கண்கலங்கி கொள்கின்றேன்
கண்மணியே உனக்காக...

என் நினைவில் தினம். நீ
தீயாக கொதித்தாலும். 
உன் நினைவுதனை என்னால்
ஆற்றிடத்தான் முடியாது.

இதயம் தடம் மாறியது போல்
அதன் துடிப்பும்......
இத்தனைக்கும் நடுவில்
உன் நினைவுகளோடு
போராடும் என் நாளங்கள்.

தினசரி நீழும் கனவுக்காலங்கள்
கடினமாய்ப் போனாலும்.....
கரைசேரா ஒரு படகைப்போல்.
காத்திருக்கும் என் மனது
என்றும் உன் வருகைக்காக 
காத்திருக்கும்.....


சாயல்

இருளைக் கலைத்த நிலவே... நீ
பகலில் கலைந்த மாயமென்ன.
மௌனம் தேடித்திரியும் மனமே... உன்
கவனம் எல்லாம் எங்கே?
சலனம் அற்றுப்போகும் போது
ஜனனம் ஒன்று உண்டு...

கவிதை பாடும் குயிலே... உன் 
காலை வணக்கம்தான் என்ன.
மலரைத்தேடும் வண்டே... நீயும்
மௌனமாகிப்போகாதே...
இரையைத்தேடும் மயிலே... உன்
அழகை கொஞ்சம் தாவேன்... அவள்
களையைக்கொஞ்சம் நான்
கலையக்கண்டேன்

விழிகள் தூங்கும் போதும்
ஒளிகள் அங்கு உண்டு... என்
செவிகள்  விழங்கிகொள்ளும்... உன்
விழிகள் பேசிய மொழிகள்தனை...
கவியில் கூடகொண்டேன் அதை
கவனமாக கணிசம் கொண்டு


புத்தாண்டே 2014

புத்தாண்டே புத்தாண்டே உன் 
புதுவரவு மிக்கதே...மிக்கதே.
எத்தனை நாள் காத்திருந்தேன் 
நித்திரையில் நீ உதித்தாயே..

இன்பங்கள் பெருகிடவும்
துன்பங்கள் விலகிடவும்
தூய்மையாய் நாம் தழைத்திடவும்
தாய்மையென நீ நின்றிடுவாய்.

அன்பென்னும் சோலைதனில்
பண்பாக வாழ்ந்திடவே நீ 
பாரினிலே உதித்தநாள்
பவனியிலே அது நல்லநாள்.

ஒன்றாக நின்றிடுவோம்
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்
நன்றாக பிறந்துவிட்டாய்
நல்லரதுவே நடக்கட்டும்.
நாமெல்லாம் உனை போற்றிடுவோம்
புத்தாண்டே புத்தாண்டே...



தென்றலோ

பெய்கின்ற மழையை
நில் என்று சொன்னால் 
நிற்குமா ஆனால் நனையாமல் 
இருக்க முடியும் 
புறம் பேசும் மனிதர்களை 
நிறுத்த முயல்வது நடக்காத காரியம் 
ஆனால் நீ நீயாக இருக்க முடியும்

தென்றலோ

Views 456

பெய்கின்ற மழையை
நில் என்று சொன்னால் 
நிற்குமா ஆனால் நனையாமல் 
இருக்க முடியும் 
புறம் பேசும் மனிதர்களை 
நிறுத்த முயல்வது நடக்காத காரியம் 
ஆனால் நீ நீயாக இருக்க முடியும்

மனமிரங்கி வாராயோ


உள்ளம் நிறைவு கொண்டேன்
உன்னைக் கண்டதால் என் 
எண்ணங்கள் கோடி கோடியாய்
முளைத்தெழுந்து கவிகளாகின இது
காதலின் வெளிப்பாடோ. இல்லை
உன்னை கண்டதின் நிலைப்பாடோ...

உன் மௌனப் பார்வையால்
என்னுள் முளைத்த வரிகள்
வார்த்தைகளாயின.
குயிலின் பாடல் தேடி 
அலைந்தவன் நான்.
உன் நாணல் பார்வையால் 
ஓரம் கொண்டு. உன் 
சாரல் தேடிக்கொண்டவன்...

காதலென்னும் வீதியிலே உன் 
கைகோர்த்து நடைபயிலும்
சிறுபிள்ளை நானானேன். உன்
இடையோர நீழ் கூந்தலில்
வசையுண்டு போன சிறு
வண்டாகிப்போனேன் சில வேளை. ..

மதிமயங்கி போகின்றேன். 
மனமிரங்கி வாராயோ....
சிறகிழந்த புள்ளாகி
தரையிறங்கி கொள்கின்றேன்...


அமைதியின் சின்னமே


சாவுவந்து ஒரு சரித்திரத்தை
சரித்த செய்தி கேட்டு. என் 
சரீரமும் சரிந்ததே....
தென்கோடி இனத்தில்
முன்கோடி எனக்கில்லை
என்கோடி மக்கள்தான் என
எடுத்துரைத்து எழுந்தவனே.

கறுப்பினத்தில் உதித்த
வெண்நெஞ்சுக்காறனே...
நெல்சன்மண்டேலா
வெள்ளையன் உன்னை
வெளுத்தபோதும் நீ
அழுக்காகாது மிடுக்காகிக்கொண்டு
அடிமைதனை உடைத்தாய்.

இருபத்தைந்து ஆண்டு
சிறைவாசம்தானோ... இன்று
எல்லோர் மனவாசத்திலும் 
நீ வாழ்கின்றாய்...

அமைதியின் சின்னமே
மண்டேலா...... நீ
மடியவில்லை.
மரணம்தான் மடிந்தது.
முடிந்து போகாது உன்கதை
வரலாற்று ஏடுகளில்
உன் வாழ்வு
ஒவ்வொரு படிக்கற்களாக அமையும்..!

 

என்றும் நீதான்

இறைவன் தந்த 
இன்பவரம் நீதான். என்
இசையில் என்றும்
இணைந்திட்ட  
உந்தன் பெயர்தான். என் 
கவியில் கூட
கலந்துவிட்ட 
கலைமகளும் நீதான்.
கண்ணிமைக்கும் நேரத்தில்
கனவுக்குள்ளும் நீதான். என்
மன்னவளே .....
மகிழ்வுடனே எழுதுகின்றேன்
இக்கவியை. 
உன் கைபிடித்த நாளது
இன்நாளே.....

My Blog List

Total Pageviews