Friday, 29 November 2013

இதயம் இன்பம் கொள்ளுது

என் சிரசைச் சிந்தை கொள்ள வைத்த
என்னுயிர் சின்ன சீதையே.
என்நாளும் உன்நினைவில் வாழும்
உன்னுயிர் உன்னத ராமனடி நான்.

நீயின்றி நானில்லை என்பது போல
தினம் என்னுள் உறங்குதடி உன்னுயிர்.
தீபங்கள் ஒளிர்வது போல தினம்
மிளிருதடி உன்நினைவுகள் என்னுள்.

யாகங்கள் செய்தேனோ தெரியவில்லை.
அப்பிறவியில் இப்பாவிநான். ஏனெனில்
பஞ்சணையில் படுத்துறங்கி உன்னோடு
பாசமழை பொழிகின்றேன் இப்போ.

எப்பிறவி எடுத்தாலும் நாம்
இணைந்திருக்கும் இப்பிறவிபோல
இனித்திடுமோ இயம்பிடுமோ
தெரியவில்லை இனிவரும் காலம்.

பஞ்சணையில் படுத்தாலும் உன்
நெஞ்சணையில் படுத்துறங்கி என்
பாசமதை உன்னிடத்தில் கொட்டி
ஆனந்தம் கொள்வது போலுள்ளதடி.

என்னவளே.......
நீ என்னோடு இணைந்த நாளிலிருந்து
என் இதயம் இன்பம் கொள்ளுதடி
இனிவரும் நாளும் இன்பமாகுமடி.
என்றும் அன்புடன் உன்னுயிர் நானடி...

No comments:

Post a Comment

My Blog List

Total Pageviews