Saturday, 30 November 2013

ஊரின் நினைவு

                                                               ஊரின் நினைவு


கனவுகள் துரத்த‌
தூக்கம் மறுக்க. உன் 
நினைவுகளோடு....என் 
நெஞ்சில் ஏக்கம் மட்டும்
எஞ்சின.....

உன்னை பிரிந்த சோகம்
மாறாதவடுவாகிப்போனாலும்
உன் நினைவுகள்.... 
என்றும் வற்றாத நீர்தான்.

பனைமரக்காற்றே..
கடல்வெளி ஊற்றே..
சுடுமணல் தரையே..
கொண்டல் பூவே..
கோவைப்பழ்மே..
உம்மோடு பழகிய காலம் எதுவோ.
அதுவே... அதுவே...

ஆடே மாடே கோழியே.. நீர்
அஃர்திணை பொருளாய் ஆனாலும் 
உயிர் தரும் மூச்சின் 
அன்பின் அடையாளமே.

தெருவோரக்கடைகளும்
தெருமுனைக்கிணறும்
வருவோர் கூடமும்
வாசகர் சலையும்
விளையாடும் வீரர் எம்
விளையாட்டு திடல்களும்
மறந்திடத்தான் முடியுமோ. தினம்
மடியினிலே சுமக்கின்றேன்.

ஆலையமணிகளின் ஓசையும்
அங்கே நடந்திடும் பூசையின் விதிகளும்
நம் வாழ்வு மிளிர்ந்திட கேட்டிடும்.
அங்கு புலர்ந்திடும் பொழுதே
எம்மை மலர்ந்திடச்செய்திடும்.
இங்கு ஒளிர்ந்திடாச்சூரியன்
தினம் மலர்ந்திடச்செய்திடும்
எம் ஊரின் நினைவுகளை..

என்றும் அன்புடன்
உங்கள் றொபின்சியா

Friday, 29 November 2013

என்மனம் ஏங்குது

வாழ்விழந்து வகையிழந்து
வங்கக்கடல் தாண்டி. இங்கு
வந்தேறி விட்டோம்.
 
வழியின்றி விழிக்கின்றோம்
மொழியன்றி தவிக்கின்றோம்
போராலே இங்கு வந்தோம்
போர்வைக்குள் இங்கு இருக்கின்றோம்.
 
சொந்தங்கள் கூடி 
சுகமாக வாழ்ந்த எம் நாடு
எந்நாழும் சொர்க்கம்தான். எமக்கு
இங்கு பந்தங்கள் பிடித்து
பணங்கள் குவித்தாலும் தினம்
நெஞ்சங்கள் குமுற....
நொய்ந்துதான் போகின்றோம்.
 
மண் கொண்டு அங்கே
சிறு மனையொன்று செய்து
மனம்மகிழ மல்லாக்கப்படுத்தாலும்
மறுபேச்சுப்பேச அங்கே யாரேதுமில்லை.
 
பெரு மனையிங்கு இருந்தாலும் 
மனம்மகிழ்ந்து இருக்க
மனம்கூட இல்லை. ஏனெனில்
மாடாய் உழைத்து மாண்டுநாம் போகின்றோம்.
 
மானங்கள் போகுது
மனசும்தான் நோகுது
என் மண்ணில் போய் வாழ
என்மனமும்தான் தினம் ஏங்குது..

உன்னைச் சுமப்பேனடி

தேவி உன்னைக்காண்கையில் என்
தேகம் சிலிர்க்குதடி.
தேடும் இடமெல்லாம் உன்
ஞாபகங்கள் தேங்குவதால். தினம்
என்நிலை தடுமாறுதடி.
நான் ஆறியமருகையில்
அந்தரத்தில் பறப்பதுபோலுள்ளதடி.
என் அன்னக்கிளியே....
இறைவனிடம் கேட்டேன் ஓர்வரம்
என் கருவறையில் உன்னைச்சுமக்க.
அவன் கொடுத்தால்..
நிச்சயம் என் கல்லறைவரை
உன்னைச் சுமப்பேனடி.

என் மனம் ஏங்குதடா

அன்பாகப்பேசி
என்னுள் ஆசையை வளர்த்து
தினம் என்னைக் கொல்லுகின்றாயடா
என் நெஞ்சைக் கொள்ளைகொண்டவனே
 
உன் மாய லீலைக்குள்
என்னை மயங்க வைத்ததால்
கோடி மக்களில் நீ மன்மதனடா
உன்னை காண என் மனம் ஏங்குதடா
 
நான் எட்டிப் பார்க்கும் இடமெல்லாம்
உன் சுட்டிக் குணம்தான் தோன்றுதடா
நீ எட்டி நின்று பேசினாலும்
என்னைக் கட்டியணைப்பது போல தோன்றுதடா
 
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டவனே
என்னை எப்போது அள்ளிக்கொள்ளப் போகின்றாயடா
உன்னைக்காண எண்ணுகையில் என்
கால்கள்கூட துள்ளிக் குதிக்குதடா...

துடிக்குதடி என்மனது

நீதுள்ளி விளையாடிய
பள்ளிப்பருவம் என்னை
துவள வைத்ததடி. உன்
பொன்முகவழகில் முத்தமிட
என் உதடு துடிக்குதடி. உன்
கிளி மூக்கில் கிள்ளி விளையாட
என் கரம் துடிக்குதடி.
 
செருகிய மல்லிகை மொட்டாய்
சிரிக்கும் உன் சிரிப்பழகு
என்னை மயக்குதடி. உன் 
கன்னத்தை கொஞ்சும்
கருங்கூந்தலை என்
கைவிரலால் கோத 
என் மனம் துடிக்குதடி.
 
உன் மெல்லிடை சுற்றி
மேனியைப்போர்த்திய சேலை போல
நானிருக்க என்மனம் ஏங்குதடி.
நீ நடக்கையில் மண்ணில்
உன் பாதம் பட
என் மனம் நோகுதடி.
மொத்தத்தில் உன்னோடு நானிருக்க
எந்நாளும் என்மனம் துடிக்குதடி.

உழவனின் பரிதவிப்பு

ஏர் பிடிக்கும் உழவர் நாம்
இயலாது படுத்திருந்தால்
இமைகூட ஆடாது இவ்வுலகில்
இன்றைக்கும் நாமிங்கு
இயந்திரமாய் இயங்குவதால்
இனிதாக இயங்குகின்றது இவ்வுலகு.

கணிணியிலே நீரெல்லாம் மூழ்கையிலே
களனியிலே நாமிங்கு மூழ்கின்றோம்
களையெடுத்து நாமிங்கு கருகையிலே
கன விலைக்கொடுத்து வெளிநாடு போகின்றீர்

தரப்புழுதியிலே நாமிங்கு நிற்கின்றோம்
மின் விசிறியிலே நீரெல்லாம் இருக்கின்றீர்
விண்ணுக்குள் நீரெல்லாம் செல்கின்றீர்
மண்ணுக்குள் தண்ணீர் விட்டு மக்களை நாம் காக்கின்றோம்.

விற்பனையில் நமக்கெல்லாம் தரக்குறைவு
விலைவாசியால் உமக்கென்ன பெருங்குறைவு
வீணாகப்போகின்றது எம் விளை நிலம்
வீண்பாகப் போகின்றது உம் நிலை

எம் நிலமை பாராது நீர்சென்றால்
பார்கூடப்பாழாகும் சொல்கின்றோம்
போராடு எமக்காக நீயும் புது
பொலிவோடு நாமிங்கு வாழ்வோம் ஒன்றாக........

பசி..!

பள்ளி செல்லும் பாலனிவன் 
பசிக்கொடுமை தாங்காது 
பலதூரம் செல்கின்றான்
தெருவோரக்குப்பையைக் கிளறியபடி.

இதயம் இன்பம் கொள்ளுது

என் சிரசைச் சிந்தை கொள்ள வைத்த
என்னுயிர் சின்ன சீதையே.
என்நாளும் உன்நினைவில் வாழும்
உன்னுயிர் உன்னத ராமனடி நான்.

நீயின்றி நானில்லை என்பது போல
தினம் என்னுள் உறங்குதடி உன்னுயிர்.
தீபங்கள் ஒளிர்வது போல தினம்
மிளிருதடி உன்நினைவுகள் என்னுள்.

யாகங்கள் செய்தேனோ தெரியவில்லை.
அப்பிறவியில் இப்பாவிநான். ஏனெனில்
பஞ்சணையில் படுத்துறங்கி உன்னோடு
பாசமழை பொழிகின்றேன் இப்போ.

எப்பிறவி எடுத்தாலும் நாம்
இணைந்திருக்கும் இப்பிறவிபோல
இனித்திடுமோ இயம்பிடுமோ
தெரியவில்லை இனிவரும் காலம்.

பஞ்சணையில் படுத்தாலும் உன்
நெஞ்சணையில் படுத்துறங்கி என்
பாசமதை உன்னிடத்தில் கொட்டி
ஆனந்தம் கொள்வது போலுள்ளதடி.

என்னவளே.......
நீ என்னோடு இணைந்த நாளிலிருந்து
என் இதயம் இன்பம் கொள்ளுதடி
இனிவரும் நாளும் இன்பமாகுமடி.
என்றும் அன்புடன் உன்னுயிர் நானடி...

என் தேனமுதே..



அன்பே.........
என் வீட்டு மொட்டைமாடியில்
உனக்காக நான் காத்திருந்தேன்.
மணம் வீசும் தென்றலாய்.....
பெண்மயில் போல நீ
இடைமீது குடத்தோடு. உன்
கண்விழியின் ஒளி என்மீதுபட
வெண்தாமரைபோல்
உன்வீட்டு முற்றத்தில் நின்றாய்.
கள்ளழகியே உன் மெல்லொளி
என்மெய்யுருவில் பட்டதால்
பனிமூடலின் மோகமெல்லாம்
என்னை மூட பயந்துநின்றன.
உன்கருங்கூந்தல் தோகை உன்
பின்மேனியூடு தொடைதூரம் செல்வதைக்கண்ட
கார்மேகக்கூட்டமெல்லாம்
வெக்கிக் கலைந்தே செல்லுதடி.
மொட்டவிழ்ந்த பூக்களெல்லாம்
தம்முள் முட்டிமோதிக் கொள்ளுதடி.
கட்டழகு மேனியோடு அங்கு
இள வட்டழகி நீ வாசலிலே நின்றதனால்.
கண்விழித்த  கதிரவன்கூட
மெல்லக்கலக்கத்தோடு மேலெழுந்தான்
கள்ளச்சிரிப்பழகோடு நீ அங்கு
சூரியகாந்திப்பூப் போல நின்றதனால்.
தேனெடுக்கும் தேனியெல்லாம்
தேன்ராகம் பாடிக்கொண்டு
என் தேனமுதைத் தேடுகின்றது.
தேனமுதே..............
அவை உன்னைத்தீண்ட முன்
நீ ஓடிவந்து என்னுள் உறைந்துவிடடி..

உன்னோடு பயணிக்க வேண்டுமடி

அசைந்தாடும் தேரோ.
ஆகாய வெண்நிலவோ.
மெருண்டோடும் பெண்மானோ.
மயிலே.............
உன்மாயை எனக்குப்புரியவில்லையடி.
 
மணம் வீசும் தென்றலோ.
வளைந்தோடும் நதியோ.
மெல்லிசை கொண்டு
பாடும் குயிலோ.
பனி மழை தூவும் கரு மேகமோ.
என் கண்ணில் படா
கானல் நீரோடி நீ.
 
என் கவிக்குள்
அடங்கா கயல்விழியே.
என் நெஞ்சை
கொள்ளை கொண்ட கள்ளியே.
காலம் பூராவும் நான்
உன்னோடு பயணிக்க வேண்டுமடி.

அவள் நினைவில்

காட்டாறு போல ஓடுகிறது
என் நெஞ்சில் உன் நினைவுகள்
கடந்த காலத்தை நினைக்கையில்
அது கனம் பெற்ரு நோகிறது
 
கண்மூடும் முன்னே உன்
முகம் வந்து நிற்கிறது என் முன்னால்
விடிகின்ற பொழுதில் கூட உன்
புன்சிரிப்பைப் பார்க்கின்றேன் இப்போதும்
 
இரவுகள் நீழ்கின்றன 
என் கனவில் நீ இருப்பதால்
பகல்கள் விரைகின்றன
என் நினைவில் நீ இருப்பதால்
 
தூங்க மறுக்குதடி என் கண்கள்
உண்ண மறுக்குதடி என் உதடுகள்
உன்னை நினைக்கையில் என்
சரீரமும் சாய்ந்து போகுதடி
 
ஏக்கங்கள் நிறைந்தாச்சு என் மனதில்
ஏனிந்த மாற்றமென
எண்ணி நான் பார்க்கையிலே என்
நெஞ்சில் நீதான் மிச்சமடி
 
கவி கொண்டு உனை வாழ்த்த
நான் கவிஞனல்ல என்
கண்கண்ட உன்னழகைப் பார்த்து
என் கைகூட முயல்கிறது கவியெழுத
 
பண்டய இலக்கியத்தில் நான்
படித்ததுண்டு பெண்ணின் அழகினை
அத்தனையும் பொய்யடி உன் 
மெய்யழகு ஓங்கி நிற்கையிலே.

மே நாள்



உலக மக்களின் மேன்மை நாள்.
உழைக்கும் வர்க்கம் தம்
உரிமைகளைக்கோரும் நன் நாள்.
சாதி மதம் மறந்து
மகத்துவம் காணும் மாநாள்.
ஓடியோடி உழைப்போரெல்லாம்
ஓய்வாக இருக்கும் ஓர்நாள்.
ஒருகுடையின் கீழ் தொழிலாளரெல்லாம்
ஒன்றாகும் உன்னத நாள்.
மாய்ந்துளைகும் பாமரர்க்கெல்லாம்
மனதார மானியம் கிடைக்க
நாமெல்லாம் மகிழ்வுடனே
உறுதிபூணும் மகத்தான நாள்.
இன்றைய மே நாள்.

உன்னிடம் வீழ்ந்தேன்

இளங்காலைத் தென்றலோடு
இசையொன்று மீட்டிருந்தேன்.
இனியவளே உன் இதயத்தில்
இதமாய் நான் குடிகொள்ள.
என் இருவிழி கொண்டு உன்
மெய்யுரு பார்த்து மேனிசிலிர்த்தேன்.
அவ்விழி உன்னில் அன்பு கொண்டதால்
என் விழி மூடி உன்னிடம் வீழ்ந்தேன்.
சத்தங்கள் எல்லாம் சங்கீதமாகின.
சங்கதியெல்லாம் உன்கதிபாடின.
சுருதிகூட சுகமாய் மீட்டது.
சுந்தரியே.......உன்னால் சுகம் கண்டேனடி.
வாழும் நாளில் உன்னோடு நான்
வசந்தங்கள் வகையின்றிப்பாடி
வையத்தில் வானுயரப்பறந்து
உன்மடியில் சாயவேண்டுமடி.

கவியெழுத வைக்குதடி

எண்ணங்கள் பல கோடி அதில் 
உன் கலை வண்ணங்கள் சில கோடி
என் வார்த்தைகள் தடுமாறுதடி 
உன் அழகான கன்னத்தாலடி 

ஆயிரம் நிலவொளிபோலுள்ளதடி 
என்னை மயக்கும் உன் கண்ணொளி 
றோசாப்பூவின் இதழடி. என்னை 
ஈர்க்கும் உன் உதட்டழகடி 

காற்றில் கலக்கும் உன் பேச்சொலி 
என்னைப்பாடவைக்கும் இசையடி 
நீ சிணுங்கும் சிரிப்போ 
சில்லறைச்சிதறலடி 

கார்மேகக்கூட்டம் போலுள்ளதடி. உன் 
கருங்கூந்தலின் தோகையழகடி. நான் 
மாலை சூடப்போகும் உன் கழுத்தோ 
நிறைகுடச்செம்பின் கலையழகடி 

உன் நடையின் இடையழகோ 
என்னை நிலைதடுமாற வைக்குதடி. 
மொத்தத்தில் உன் மேனியே மிகையழகடி 
அதுதான் என்னை கவியெழுத வைக்குதடி

ஓ மனிதா

மண்ணில் நீ பிறக்கையில்
நீயும் ஒரு மாந்தையடா.
மரபுகள் ஏற்று நீ மிளிர்கையில்
நீயும் ஒரு குழந்தையடா.
பெரியோர் போற்ற நீ வாழ்க்கையில்
நீயும் ஒரு அறிஞனடா.
இல்லறம் கூடி நீ வாழ்க்கையில்
நீயும் ஒரு வழிகாட்டியடா.
இறையன்போடு நீ இருக்கையில்
நீயும் ஒரு ஞானியடா.
இத்தனையும் உன்னிடத்தில் இருப்பதால்
நீயும் ஒரு மனிதனடா....

என் இதயத்தில் இடமுண்டு

என் கனவோடு கலந்துவிட்ட 
கனிக்குயிலே நான் 
கண்சிமிட்டும் வேளையில் நீ 
கனதூரம் சென்றுவிட்டாய். 

என் நினைவின் நிலவாக 
உனை எண்ணினேன். 
சுட்டெரிக்கும் சூரியனாய் நீ 
என்னை விட்டெறிந்து போனாயடி. 

கொட்டும் மழையிலும் உன் 
பாதம்பட்டயிடமெல்லாம் 
விட்டிடா நான் தொடர்ந்தேன் 
உன்னடி சேர்வதற்கு. 

உன்மனதை உருக்கி 
என்மனதைத் திருடிவிட்டு 
நீ மறைந்துபோன 
மாயம்தான் என்னடி. 

அன்பைப்பொழிந்து என்னை 
அரவணைக்கும் வேளைதனில் 
நீ என்னை அந்தரிக்கவிட்டுச் சென்றாய் 
நான் அலையவில்லை உனைத்தேடி. 

ஏற்றத்தாழ்வுதனைக் கொண்டு 
என்னைத்தவற விட்டுப்போனாயடி 
எரியவில்லை என்மனம் அது 
தினம் உருகியது உனக்காக. 

மரணிக்கும் மனிதனுள் 
மரத்துப்போன மானிடன் நான் 
நான் மரணித்தாலும் உன் 
நினைவுகள் மடியாது என் நெஞ்சில் 

நீ இறந்தாலும் இடுவதற்கு 
என் இதயத்தில் இடமுண்டு 
இறுதிவரை காத்திருக்கும் அது 
என்றும் உனக்காக . 

என்னவளே உன்னை 
மண்டியிட்டுக் கேட்கின்றேன். 
மண்ணையாவது விட்டுவிடு 
அது மௌனமாக வாழ.

ஆனந்தம் கொள்கின்றேன்

அன்பே
பாறைகூடப் பூப்பூக்கும் உன்
பொன்முகத்தைக் கண்டால்
தேயும் நிலாக்கூட
தினசரி வந்து போகும் உன்
பிறைபோல் நெற்றி பார்க்க
சிகரம்கூட சரிந்து பார்க்கும் உன்
சிரிப்பொலி கேட்டால்
சத்தமில்லாது நீ நடந்து போகையில்
மண்கூட முத்தம் தருமடி
காற்றில் உன் மூச்சுப்படுவதால் அது
தென்றலாய் மணம் வீசுதடி
கானகியே
நீ பாடும் குரல் கேட்டு
குயில்கூட தன் குரல் மற்ந்துபோச்சடி
ஆடும் மயில்கூட தன்
ஆட்டமிழந்து அந்தரிக்குதடி
ஆசை நாயகியே
ஆனந்தம் கொள்கின்றேனடி உன்
அழகினை இவர்கள் புரிந்து கொண்டதால்

தேவியர்களை மிஞ்சியவள்

ஓ...............பிரம்மா. 
நீ படைத்த மனித சிற்பங்களில் 
என்பார்வை ஏன் 
இவள் பக்கம் மட்டும் சென்றது. 

என்கண்ணில் இவள் குடிகொண்டு 
என் இதயத்தை திருடிவிட்டதாலா. 
தீண்டும் இவள் பார்வை 
தினம் என்னைக் கொல்லுவதாலா. 

உளி கொண்டு இவளை வடித்தாயா. 
உன் உள்ளத்தின் குமுறலை வெளிக்கொண்டாயா. 
உருகிநிற்கின்றேன் இப்போ 
உன் உள்நோக்கம் தெரியாமல். 

அஞ்சிக்கொண்டு அவளருகே சென்றேன். 
கொஞ்சிநான் கொஞ்சம் விளையாடுவதற்காக. 
மிஞ்சி நின்றாள் அழ்குத்தேவதையவள். 
தேவலோக தேவியர்களை விட.................

நீ என்னவள்தானடி

கோடி மின்னல்போல் தினம்
என்னைத்தேடிவரும் உன்பார்வையால்
என்னையே உன்னிடம் தந்தேனடி.
ஏழையிவன் வாழ்வில் ஒளி
தீபமதை ஏற்றுவாயென இருந்தேனடி.
என் நினைவை மறந்து தினம் 
உன்நினைவில் வாழ்ந்தேனடி.
என்னவளே.
நீ என்னோடு பழகிய சுவடுகள்
இன்றும் என்னுள் சுரக்குதடி.
மன்னவளே.
மணம் கொண்டு மன்னவளாக நீ வாழ்ந்தாலும்
என்னவளே என்னாளும் நீ என்னவள்தானடி.
என்னருகில் நீ இல்லையென்றாலும் தினம்
என்நினைவில் என்னுள் வாழ்கின்றாயடி.
தவம் செய்து உன்னையடைந்தேனடா இது
அன்று நீ சொன்ன தாரகை மந்திரம்.
இன்று தனியே என்னைத்தவிக்கவிட்டாயடி.
பொன்னவளே.
உன்னைப்பொன்னால் பூசித்துக்கொள்ள
என்னால் முடியாதென்று பொன்
பேராசை உனைப்பேர்த்துச்சென்றது.
பெண்ணவளே.
பேசாது நீ இருந்திருந்தால் என்
மார்பில் உனைத்தாங்கி நான்
எந்நாளும் மகிழ்ந்திருப்பேனடி.
மன்னவளே.
இப்போ மாற்றான் மனைவியே.
இந்நாள் வரை பூசிக்கின்றேன்
உன்நினைவை என்நெஞ்சில்.
உயிர் உள்ளவரை உன் நினைவினில்
உனக்காக வாழ்ந்து உயிர் துறப்பேனடி...............

My Blog List

Total Pageviews